ரெட், ஆரஞ்சு அலர்ட் எதிரொலி – விரையும் தேசிய பேரிடர் மீட்புப்படை.!
கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எதிரொலி காரணமாக தேசிய பேரிடர் மீட்பு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இன்று கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், நாளையும் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ரெட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் எதிரொலியால் முன்னேற்பாடுகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் பேரிடர் மேலாண்மை துறை ஆலோசனை நடத்தியது.மிக முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரிக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளும் கோவை, மற்றும் நீலகிரிக்கு விரைந்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
SRH vs RCB: மாஸ் காட்டிய ஹைதராபாத்.! வெளுத்து வாங்கிய இஷான் கிஷான்.., ஆர்சிபி-க்கு இமாலய இலக்கு.!
May 23, 2025
அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!
May 23, 2025