நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இன்று கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், நாளையும் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ரெட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் எதிரொலியால் முன்னேற்பாடுகள் தொடர்பாக […]