சோனியா – ராகுல் காந்தி சந்திப்பு..,”குடும்பத்தாருடன் இருப்பது போன்ற உணர்வு” – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி.!

சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்தது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

CMStalinAtDelhi

டெல்லி : டெல்லியில் நாளை (மே 24) நடைபெறவுள்ள ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி சென்றடைந்தார். தற்பொழுது, டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியை நேரில் சந்தித்தார்.

சோனியா காந்தி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இருவரையும் சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்து, ”சோனியா காந்தியுடனும், அன்பு சகோதரருடனும் (ராகுல் காந்தி) டெல்லியில் அவர்களின் இல்லத்தில் ஒவ்வொரு சந்திப்பிலும் ஒரு சிறப்பு அரவணைப்பு இருக்கிறது. இது உண்மையிலேயே குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வை அளிக்கிறது” என்று முதலவர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு  நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

நாளை நடைபெறவுள்ள ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீடு குறித்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்த அவர் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்காத நிலையில், இம்முறை அவர் பங்கேற்றிருப்பது கவனம் பெற்றுள்ளது.

இதற்கிடையில், நாளை (மே.23) நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தின் இடைவேளையின் போது பிரதமர் மோடியை தனியே சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்