அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!

கூகிள் அறிமுகப்படுத்திய Veo 3-ஐ மூலம் வீடியோக்களை தயாரித்து சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

Veo3

அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. வீடியோ மட்டுமல்லாமல் அதற்கேற்ற ஆடியோ, கதாபாத்திரங்களின் உரையாடல், இசை, சுற்றுப்புற சத்தங்கள், SFX உள்ளிட்டவற்றை தெளிவாக தயாரித்துக் கொடுக்கிறது.

கூகுள் I/O நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ‘Veo 3’ Al தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. Veo 3 அறிமுகப்படுத்தப்பட்டவுடன், சமூக ஊடக பயனர்கள் அதைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோக்களை இன்ஸ்டா, எக்ஸ் மற்றும் யூடியூப்பில் பகிரத் தொடங்கினர்

இதனை பார்த்த சமூக ஊடகங்கள் முதல் தொழில்நுட்ப உலகம் வரை அனைவரும் அதைப் பாராட்டி வருகின்றனர். இந்த புதிய அம்சத்தில், வீடியோ மட்டுமல்லாமல் அதற்கேற்ற ஆடியோ, கதாபாத்திரங்களின் உரையாடல், இசை, சுற்றுப்புற சத்தங்கள், SFX உள்ளிட்டவற்றை கச்சிதமாக தயாரித்துக் கொடுக்கிறது.

இது 100% தத்ரூபமாக இருப்பதாக இணையவாசிகள் ஆச்சர்யம். இதன் மூலம் வீடியோக்களை தயாரித்து சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்த வசதியை பயன்படுத்த மாதம் 250 அமெரிக்க டாலர்கள் செலவாகுமாம்.

ஆனால், இந்த அப்டேட் இன்னும் இந்தியாவில் நடைமுறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ​​அமெரிக்காவில் கூகிள் ஜெமினி செயலியில் பிரீமியம் சந்தாதாரர்களுக்கு மட்டுமே Veo 3 கிடைப்பதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்