Firebreaksout [File Image]
போபால்-டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று காலை மத்தியப் பிரதேசத்தில் உள்ள குர்வாய் கெத்தோரா நிலையத்தில் போபாலில் இருந்து டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பிடித்த ரயிலின் சி-14 பெட்டியில் 36 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
தீவிபத்து ஏற்பட்டதை அறிந்ததும் ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இதன்பின், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வந்தே பாரத் ரயிலின் சி-14 பெட்டியின் பேட்டரியில் தீ ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ரயில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் ஆகும். இதனை ஏப்ரல் 1ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல் விளையாடிய இளம் வீரர், 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி…
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டு…
சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…
சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு…
சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத்…
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…