ஐபிஎல் ஸ்டார் வைபவ் சூர்யவன்ஷி 10-ம் வகுப்பு தேர்வில் ஃபெயிலானாரா? வெளியான உண்மை.!
ஐபிஎல்லில் 35 பந்துகளில் சதம் அடித்த வைபவ் சூர்யவன்ஷி, 10ம் வகுப்பில் தோல்வியடைந்தாரா? உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.

டெல்லி : பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல் விளையாடிய இளம் வீரர், 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். ஐபிஎல் ஸ்டார் வைபவ் சூர்யவன்ஷி சிபிஎஸ்சி 10-ம் வகுப்பில் ஃபெயிலானவர் என்று தகவல்கள் பரவின.
அதன் பிறகு, இந்த செய்தி தொடர்பாக சமூக ஊடகங்களில் ஏராளமான மீம்ஸ்கள் மற்றும் பதிவுகள் வைரலாக பரவி வருகிறது. இதனால், விளையாட்டில்தான் இவர் புலி, படிப்பில் எலி என்று நெட்டிசன்கள் சிலர் கலாய்க்கத் தொடங்கினர். ஆனால், உண்மையில் சூர்யவன்ஷி குறித்த தகவல் முற்றிலும் பொய் என்று தெரியவந்துள்ளது.
View this post on Instagram
ஒரு நகைச்சுவையான இன்ஸ்டாகிராம் பதிவில், வைபவ் சூர்யவன்ஷி தோல்வியடைந்ததாகவும், அவரது விடைத்தாள்களை “டிஆர்எஸ் பாணி மதிப்பாய்வு” செய்ய வேண்டும் என்று பிசிசிஐ கோரியதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவ, வைபவ் உண்மையில் தேர்வில் தோல்வியடைந்துவிட்டாரா என்ற குழப்பத்தை ஏற்படுத்தியது.
அதாவது உண்மை என்னெவென்றால், வைபவ் சூர்யவன்ஷி இன்னும் தனது 10 ஆம் வகுப்பை படிக்கவில்லை. வைபவ் தற்போது 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில், 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்குப் பிறகு அவர் தோல்வியடைந்ததாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது.
வைபவ் இன்னும் ஒரு மாணவராக இருந்தாலும், இந்தியன் பிரீமியர் லீக் 2025 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் 14 வயது வைபவ் சூர்யவன்ஷி, 5 போட்டிகளில் 209.45 ஸ்ட்ரைக் ரேட்டில் 155 ரன்கள் எடுத்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் அற்புதமான சதம் அடித்து வரலாறு படைத்தபோது வைபவ் சூர்யவன்ஷியின் பெயர் பிரபலமானது.
வைபவ் தனது ஐபிஎல் வாழ்க்கையை முதலில் பந்தில் சிக்ஸருடன் தொடங்கினார். வைபவ் இதுவரை 16 சிக்ஸர்களையும் 10 பவுண்டரிகளையும் அடித்துள்ளார்.