Congress [Image source : Twitter/@kcvenugopalmp]
பாட்னாவை அடுத்து ஜூலை 17, 18இல் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் காங்கிரஸ் தலைமையில் நடைபெற உள்ளது.
கடந்த மாதம் 23ஆம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. பீகார் முதல்வரும், ஜனதாதளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமார் அழைப்பின் பெயரின் கூட்டப்பட்ட இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, என பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.
இதனை அடுத்து 2வது கூட்டம் காங்கிரஸ் தலைமையில் இமாச்சல பிரதேசம், சிம்லாவில் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், தற்போது இடம் தேதி மாற்றப்பட்டு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கே.சி.வேணுகோபால் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், ஜூலை 17, 18 இல் பெங்களூருவில் எதிர்க்கட்சி கூட்டம் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கர்நாடகாவுக்கும், தமிழக அரசுக்கும் மேகதாது அணை விவகாரத்தில் உரசல் நிலவி வருவதால், பெங்களூருவில் நடைபெறும் கூட்டம் மாற்றப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் பெங்களூருவில் கூட்டம் நடைபெறும் என உறுதிப்படுத்தப்பட்டதால் திமுக அதில் பங்கேற்குமா, என்பது குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
பாரிஸ் : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…