டெல்லியில் அதிகரித்து வரும் மாசு காரணமாக, காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அடுத்த வாரம் வரை டெல்லியில் இருந்து வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது. சோனியா காந்தி கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து சுவாசிப்பதில் பிரச்சினை தொடர்ச்சியாக சிகிச்சைகள் எடுத்துக்கொண்டு வருகிறார்.
மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், சோனியா காந்தி வாரம் வரை டெல்லியில் இருந்து வெளியேற உள்ளதாகவும், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இன்று கோவா செல்கின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. கோவாவில் சோனியா சுமார் ஒரு வாரம் இருப்பார்.
கடந்த சில ஆண்டுகளாக, சோனியா காந்தி குளிர்கால மாதங்களில் டெல்லிக்கு வெளியே சிறிது நேரம் செலவிடுகிறார். சுகாதார காரணங்களால், டெல்லியில் அதிகரித்து வரும் மாசு காரணமாக சோனியா காந்தி உடல்நிலை மோசமடையும் அபாயம் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சமீபகாலமாக சோனியா அனைத்து கூட்டங்களிலும் வீடியோ மூலம் மட்டுமே பங்கேற்கிறார். தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம், நிர்வாகிகள் சந்திப்பு என அனைத்து நிகழ்ச்சிகளையும் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் மட்டுமே கவனித்து வருகின்றனர்.
சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…
சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…
சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…
சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…
கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…