கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்கள் மோதல் சம்பவம் எதிரொலியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
இந்தியா- சீனா இடையே எல்லைப் பிரச்சினை உள்ளதால், லடாக் எல்லையில் இரு நாடுகளின் படைகள் குவிக்கப்பட்டது.இதனிடையே தான் இந்தியா- சீனா வீரர்கள் இடையே லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்டது.இதில், இந்தியா வீரர்கள் 20 வீரமரணம் அடைந்தனர்.
இந்த சம்பவம் இரு நாடுகள் இடையே பதற்றத்தை அதிகரித்தது. இதனை தொடர்ந்து, அண்மையில் பிரதமர் மோடி, லடாக் எல்லை பகுதிக்கு சென்று ராணுவ வீரர்களை சந்தித்து, கலந்துரையாடிவிட்டு வந்தார். இதனால், இருநாட்டு எல்லை பிரச்சனை மீண்டும் பதற்றநிலையை அடைந்தது.
இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்கள் மோதல் சம்பவம் எதிரொலியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு அஜித் தோவல் நேற்று பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒப்பந்தத்தின்படி விரைவில் சீன மற்றும் இந்திய ராணுவத்தினரும் எல்லைப்பகுதியில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவதற்கான செயல்களைத் துரிதப்படுத்துவது குறித்தும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…