[Image Source - twitter/@GoFirstairways]
மே 9-ஆம் தேதி வரை அனைத்து விமான சேவைகளையும் ரத்து என கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
தனியார் விமான நிறுவனமான கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் திவால் நிலைக்கு செல்லும் அபாய நிலையில் உள்ளது. கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் நேற்று முன்தினம் தேசிய நிறுவன தீர்ப்பாயத்தில் திவால் நடைமுறைக்கு தானாக முன்வந்து மனு அளித்திருந்தது. அதில், அமெரிக்காவில் பிடபிள்யூ என்று அழைக்கப்படும் பிராட் அண்ட் விட்னி நிறுவனத்திடமிருந்து விமான இன்ஜின்கள் முறையாக விநியோகிக்கப்படாததால் விமான சேவையை குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இதனால் ஊழியர்களுக்கு ஊதியம், விமான நிலையங்களுக்கான கட்டணம் செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதால், கடும் இழப்பை சந்தித்துள்ளது என்றும் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், திவால் நிலைக்கு உள்ளாகி இருக்கும்பட்சத்தில் மே 9-ஆம் தேதி வரை அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்யப்படுவதாக கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
முன்னதாக திவால் நடைமுறைக்கு தானாக முன்வந்து மனு அளித்தபோது, அனைத்து விமான சேவைகளையும் மே 3, 4 தேதிகளில் ரத்து செய்வதாக Go First நிறுவனம் அறிவித்த பின்னர், அது மே 5ம் வரை நீட்டித்து அறிவித்தது. தற்போது, அனைத்து விமான சேவைகளும் அடுத்த செவ்வாய் வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மே 15 வரை விமானங்களுக்கான புதிய டிக்கெட் விற்பனையை Go First விமான நிறுவனம் நிறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக Go First நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செயல்பாட்டு காரணங்களால் மே 9ம் தேதி வரை கோ ஃபர்ஸ்ட் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இதனால் ஏற்பட்ட சிரமத்துக்கு நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம். விரைவில் டிக்கெட் தொகை ரீஃபண்ட் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், உடனடியாக டிக்கெட் தொகையை திருப்பி அளிக்குமாறு கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்துக்கு சிவில் விமானப் போக்குவரத்து (DGCA) இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…