ராஜஸ்தான் மாநிலத்தில் தலை நகரான ஜெய்ப்பூரில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஒன்பது தொடர் குண்டுகள் 12 நிமிட இடைவெளியில் வெடித்தது.இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த குண்டுவெடிப்பில் 63 பேர் உயிரிழந்ததாகவும் என்றும் 216 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு இந்திய முஜாகிதீன் என்ற அமைப்பு பொறுப்பேற்றது.இந்த அமைப்பினை தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் மீதான வழக்கு ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.இதில் முகமது சயிப், முகமது சர்வார் ஆஸ்மி, முகமது சல்மான், சைபுர் ரஹ்மான் ஆகிய 4 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.ஷாபாஸ் உசேன் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை.இதனால் அவர் விடுதலை செய்யப்பட்டார். மேலும் நான்கு பேருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்தது.இந்நிலையில் 4 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியாவின் AI-171 விமானம் (போயிங் 787-8…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) சட்டமன்றக் குழு கொறடாவாக உள்ள சேலம் மேற்கு எம்எல்ஏ அருளை மாற்ற…
டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…