பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் நீண்ட நாட்களாக அரசியலை குழப்பம் நிலவி வந்த நிலையில் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றார். துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் சட்டப்பேரவை குழுத் தலைவராக இருந்த அஜித்பவார் பதவி ஏற்றுக்கொண்டார்
இதனை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸின் சட்டப்பேரவை குழுத் தலைவர் பொறுப்பில் இருந்து அஜித்பவார் நீக்கம் செய்யப்பட்டார்.இதன் விளைவாக இன்று அஜித்பவார் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் தேசியவாத காங்கிரசில்தான் இருக்கிறேன் என்றும் அந்தக் கட்சியில்தான் இருப்பேன்.எங்கள் கட்சியின் தலைவர் சரத் பவார் தான் என்று பதிவிட்டார்.
இவர் பதிவிட்ட சில மணி நேரங்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், பாஜகவுடன் இணைந்து தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைக்குமா என்ற கேள்விக்கே இடமில்லை.சிவசேனா மற்றும் காங்கிரஸ் உடன் இணைந்து ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஒரு மனதாக முடிவு செய்துள்ளது .மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அஜித் பவார் தவறான தகவலை வெளியிடுகிறார் என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…