உத்திர பிரதேசத்தில் உள்ள மைன்பூரை சேர்ந்தவர் அனாமிகா சுக்லா. இவர் தொடர்ந்து 13 மாதங்களாக 25 பள்ளிகளில் வேலை பார்த்து அதற்கு சம்பளமாக 1 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளது அதிகாரிகளின் சோதனையில் தெரியவந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதமே இந்த மோசடி வேலை அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது. அறிவியல் டீச்சரான அனாமிகா சுக்லா பிப்ரவரிக்கு முன்னர் 13 மாதங்களாக 25 பள்ளிகளில் வேலைபார்த்து சம்பளம் பெற்றுள்ளார்.
இந்த விஷயமானது, கல்வி அதிகாரிகள் மாணவ் சம்படா அரசு இணைய பக்கத்தில் ஆசிரியர்களின் குறிப்பை பதிவேற்றும் போது, அனாமிகா சுக்லா ஆசிரியையின் தனி விபரங்கள் 25 பள்ளிகளில் வேலைபார்ப்பதாக தெரியவந்துள்ளது. இந்த தகவல் அதிகாரிகளையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
அனைத்து பள்ளிகளின் வருகை பதிவேடு, மற்ற விவரங்களில் இருந்து எப்படி அனாமிகா தப்பினார் என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து முழு விசாரணை நடைபெற்றுவருவதாகவும், தற்போது ஊரடங்கு காலத்தால் தள்ளிவைக்கப்பட்ட விசாரணை மீண்டும் தொடங்கியுள்ளதாக பள்ளி கல்வி இயக்குனர் கூறியுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…