ஆந்திர பிரதேசம் மாநிலத்திலுள்ள பாபட்லா மாவட்ட ரயில் நிலையத்தில் கணவன் முன்னிலையில் கர்ப்பிணி பெண் கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு குண்டூரில் இருந்து கிருஷ்ணா மாவட்டத்திற்கு தனது கணவர் மற்றும் மூன்று பிள்ளைகளுடன் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த கர்ப்பிணிப் பெண்ணிடம் குடிபோதையில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் தகராறு செய்துள்ளது.
அப்பொழுது கணவர் அவர்களை தடுக்க முற்பட்டபோது, 3 பேரும் சேர்ந்து கணவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன்பின் கர்ப்பிணிப் பெண்ணை அங்கிருந்து கடத்தி சென்ற கும்பல், பலாத்காரம் செய்துவிட்டு முட்புதர் அருகே விட்டு சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ரயில்வே காவல் துறையினரிடம் இந்த தகவலை கூறுவதற்கு முயற்சித்தபோது ரயில் நிலையத்தில் எந்த அதிகாரியும் தனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆந்திர பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுடன், பலாத்காரம் செய்பவர்களுக்கு தண்டனையும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய திட்டங்களும் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடந்துள்ள இந்த கொடூர சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…