கொரோனா வைரஸிற்கு உலக நாடுகளில் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் 10 பேர் இந்த கொலைக்கார வைரஸிற்கு பலியாகிய நிலையில் 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இந்த வைரஸால் முதல் உயிர் பறிபோகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் கடுமையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இந்தியா முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்துள்ளார். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து டெல்லி ஆளுனருடன் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக்கு பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கவர்னர் அனில் பைஜால் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது முதல்வர் கெஜ்ரிவால் பேசியதாவது, ‘பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. நேற்று (மார்ச்24) பிரதமர் மோடி பேசியதற்கு பின் அனைவரும் அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைகளுக்கு முன் குவிந்தனர். அத்தியாவசிய பொருட்களுக்கு எந்தவித ஒரு தட்டுபாடும் வராது என்று உறுதியளிக்கிறேன். ஆகையால் ஊரடங்கு உத்தரவால் எந்த பொருட்களும் கிடைக்காது என மக்கள் பீதியடைய வேண்டாம் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படும். இதனை பற்றி தெரிந்துகொள்ள போலீஸ் கமிஷனர் 23469536 என்ற உதவி எண்ணை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும் உடன் தெரிவித்தார்.
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…