ஆசிரம மேலாளர் ரஞ்சித் சிங் கொலை வழக்கு – குற்றவாளி குர்மீத் ராம் ரஹீம் என நீதிமன்றம் தீர்ப்பு …!

Published by
Rebekal

ஆசிரம மேலாளர் ரஞ்சித் சிங் கொலை வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் தான் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

ஹரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா எனும் ஆசிரமத்தில் அதன் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் என்பவர் இரண்டு துறவி பெண்களை பலாத்காரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2002ஆம் ஆண்டு இது குறித்த உண்மையை பத்திரிக்கையில் புலனாய்வு செய்து வெளியிட்ட சத்ரபதி என்பவர் 2002 ஆம் ஆண்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இதனை அடுத்து சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹிம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், கடந்த 2002 ஆம் ஆண்டே தேரா சச்சா ஆசிரமத்தின் மேலாளர் ரஞ்சித் சிங் என்பவரும் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.  ஆசிரமத்தில் நடக்கக்கூடிய முறைகேடுகள் குறித்து எழுத படக்கூடிய பத்திரிகையான பூரா சச் என்பதன் பின்னணியில் ரஞ்சித் சிங் இருந்ததால் தான் அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் குர்மீத் ராம், கிருஷ்ணலால், ஜஸ்பீர் சிங், சப்தில் சிங், இந்திரசேனா  உட்பட பலர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ரஞ்சித் சிங்கை கொன்ற வழக்கில் ராம் ரஹீம் மற்றும் நான்கு பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இவர்களுக்கான தண்டனை என்ன என்பது குறித்து அக்டோபர் 12-ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…

5 hours ago

பட்டையை கிளப்புமா ரெட்ரோ! முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்யுமா?

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…

6 hours ago

சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

7 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

9 hours ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

9 hours ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

10 hours ago