ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது என வதந்தி பரப்பினால் சொத்துக்கள் பறிமுதல்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தினசரி பாதிப்பு மூன்றரை லட்சத்தை தாண்டி உள்ள நிலையில் உயிரிழப்பு இரண்டாயிரத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை ஒரு பக்கம் இருக்க, தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் பலர் உயிரிழப்பது வேதனை அளிக்கும் செய்தியாக காணப்படுகிறது.
இந்நிலையில், உத்திரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், இதுகுறித்து உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், ‘உத்தரப்பிரதேசத்தில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளதாக வதந்தி பரப்பினால், அவர்களுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…