நாடே எதிர்பார்க்கும் அயோத்தி வழக்கு ! இன்று வெளியாகிறது தீர்ப்பு

Published by
Venu

நாடே எதிர்பார்க்கும் அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிறது உச்சநீதிமன்றம்.
அயோத்தியில்  1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது.நாடு முழுவதும்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு முன்பிருந்தே, அங்குள்ள 2.77 ஏக்கர் நிலத்தை உரிமை கொண்டாடுவதில் பிரச்சினை இருந்தது.
இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில்,அயோத்தி வழக்கில் 40 நாட்கள் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தது.இந்த விசாரணை அனைத்தும் முடிவடைந்த பின்பு அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் வட மாநிலங்களில் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தீர்ப்பை கூறப்போகும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ,அயோத்தி தீர்ப்பு தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையும் மேற்கொண்டார்.

பின்பு  அயோத்தி வழக்கில்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது என்று அறிவிக்கப்பட்டது.5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்,நீதிபதிகள் பாப்டே,சந்திராசூட்,அசோக் பூஷன்,அப்துல் நாசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்குகிறது. இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என்று வழக்கு பட்டியல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று  வெளியாவதையொட்டி அயோத்தி, மதுரா, வாரணாசியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .தீர்ப்பு வெளியாகவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே 144தடை அமலில் உள்ளது .மாநில அரசுகள் சட்டம்-ஒழுங்கை கண்காணிக்க வேண்டும் என ஏற்கனவே உள்துறையும் அறிவுறுத்தியுள்ளது.
 

Recent Posts

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…

30 minutes ago

சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! ‘அச்சம் வேண்டாம்’ – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…

1 hour ago

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன? நள்ளிரவு பயங்கரவாதிகளின் தூக்கம் துளைத்த தரமான சம்பவம்.!

காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…

3 hours ago

10 மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை.!

டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

5 hours ago