10 மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை.!

பாகிஸ்தான் - நேபாள எல்லையோர மாநில முதல்வர்களுடன் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனை மேற்கொள்கிறார்.

Operation Sindoor - AmitShah

டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த 10 மாநில முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேகொள்கிறார்.

பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், பாகிஸ்தான் மற்றும் நேபாளத்துடன் எல்லைகளைக் கொண்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள், டிஜிபிக்கள் மற்றும் தலைமைச் செயலாளர்களுடனான அவரச ஆலோசனை கூட்டத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தக் கூட்டம் காணொளிக் காட்சி மூலம் நடைபெறும். அதன்படி, எல்லைப்பகுதி பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்துஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், உத்தரகாண்ட், உபி, பிஹார், சிக்கிம், மற்றும் மேற்கு வங்கம் என 10 மாநில முதலமைச்சர்களுடன் அவர் ஆலோசித்தார்.

மேலும், விடுப்பில் சென்றுள்ள துணை ராணுவப் படையை சேர்ந்த அனைவரும் பணிக்கு திரும்பும் படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நீடிக்கும் நிலையில், போர் பதற்றம் நிலவிவரும் சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்