அயோத்தியில், வருகிற 5-ந் தேதி ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நடைபெறவுள்ளது. இந்த பூமி பூஜையில் பிரதமர் மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் பல மாநில முதல்வர்கள் அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்நிலையில், இந்த விழாவிற்க்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது கோவிலின் தலைமை குருவின் உதவியாளரான பிரதீப் தாஸ் மற்றும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த 14 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
திட்டமிட்டப்படி அயோத்தி கோவில் அடிக்கல் நாட்டு விழா நடக்கும் என கோவில் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதீப் தாஸ் என்பவர் தினமும் பூஜைகள் மேற்கொள்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி வருவதை ஒட்டி 3 கிலோ மீட்டர் தொலைவில் ஹெலிகாப்டர் தரையிறங்க ஹெலிபேடு அமைக்கப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழாவை ஒட்டி தூய்மைப் பணியில் 300 பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
அயோத்தில் இதுவரை 375 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…