சற்று நேரத்தில் பாபர் மசூதி தீர்ப்பு..! நீதிமன்றத்தை சுற்றி பாதுகாப்பு..!

Default Image

லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்றம் தனது தீர்ப்பை இன்று அறிவிக்கவுள்ளது.  குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனால்,  நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உத்திரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் பாபர் மசூதி 1992 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் கல்யாண் சிங் உள்ளிட்ட 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களுக்கு எதிராக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

17 பேர் இறந்து விட்டதால் 32 பேர் மீது வழக்கு விசாரணை நடந்தது. கடந்த 2001 ஆம் ஆண்டு மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் கல்யாண் சிங் உள்ளிட்டோரை அகமதபாத் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ போலீசார் மேல்முறையிடு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.  இந்த வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட 32 பேரிடம் விசாரணை முடிந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts