பயங்கரவாத நடவடிக்கைகளின் மையமாக பெங்களூரு மாறியுள்ளது..! அமித்ஷாவிடம் தேஜஸ்வி சூர்யா கோரிக்கை..!

பெங்களூருவில் என்ஐஏ பிரிவை நிரந்தரமாக அமைக்க உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா கோரிக்கை வைத்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் தேஜாஷ்வி சூர்யா உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்தித்தார். அப்போது, பெங்களூரு பயங்கரவாத நடவடிக்கைகளின் மையமாக மாறியுள்ளது. பல பயங்கரவாதிகளை கைது செய்வதன் மூலம் மற்றும் நகரத்தில் ஸ்லீப்பர் செல்கள் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே தேசிய புலனாய்வு அமைப்பை (என்ஐஏ) நிரந்தரமாக பெங்களூருவில் அமைக்கவேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜியை நான் கேட்டுக்கொண்டேன். இது விரைவில் அமைக்கப்படும் என்று அமித் ஷா உறுதியளித்தார் என பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025