கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 29 ஆகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1071 -ஐ எட்டியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கொரோனா வைரசால் பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு விருப்பம் உள்ளவர்கள் நிதி அளிக்கலாம் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி ஏராளமான கிரிக்கெட் வீரகள், திரைப்பட பிரபலங்கள், அரசியல் கட்சிகள், தனியார் நிறுவனங்கள் என பலர் அவர்களால் முடிந்த நன்கொடையை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் ஏற்கனவே திரைப்பட நடிகர் அக்சய குமார் பிரதமர் பொதுநிவாரண நிதிக்கு ரூ.25 கோடியும், டாடா குழுமம் சார்பில் ரூ.1500 கோடியும் வழங்கியுள்ளார்கள். அதானி குழுமம் சார்பில் ரூ.100 கோடி மற்றும் கிரிக்கெட் வீரர்கள் ரெய்னா, ரகானே, கம்பீர், கங்குலி என பலர் அவர்களால் முடிந்த உதவியை வழங்கியுள்ளனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.51 கோடி நிதியை வழங்கியுள்ளது. பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா, இதர நிர்வாகிகள் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் கூட்டாக இணைந்து இந்த நிதியை வழங்கியுள்ளனர். இதன் மூலம் கரோனா பாதிப்பை எதிர்த்து போராட உதவியாக அமையும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…