Bihar CM Nitish Kumar - Saurabh Kumar [File image]
Bihar : பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் JDU கட்சி பிரமுகர் சவுரப் குமார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இளம் பிரமுகர் சவுரப் குமார் என்பவர் நேற்று இரவு பாட்னா பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்று பர்சா பஜார் கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் சவுரப் கலந்துகொண்டுள்ளார்.
அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் சவுரபை சரமாரியாக சுட்டனர். இதில் சவுரபின் தலை மற்றும் கழுத்து பகுதியில் துப்பாக்கி குண்டுகள் துளைத்துள்ளது. உடன் இருந்த முன்முன் குமார் எனும் நண்பரும் இந்த துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்தார்.
துப்பாக்கியால் சுட்ட கும்பல் தப்பியோடிய பின்னர், உடனடியாக சவுரப் குமார் மற்றும் அவரது நண்பர் முன்முன் குமாரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சவுரப் குமார் ஏற்கனவே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முன்முன் குமார் தீவிர சிகிச்சைக்கு பின்னர் தற்போது அவரது உடல்நிலை சீராகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
ஆளும் கட்சி பிரமுகர் மீதான இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆதரவாளர்கள், அப்பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் குறித்து பாட்னா புன்புன் காவல் நிலைய அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…
சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…