சொந்த ஊர் பீகார்.., தமிழில் 93 மார்க் எடுத்த மாணவி – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.!
தமிழில் 93 மதிப்பெண்கள் எடுத்த பீகார் மாணவியை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா குமாரி அசத்தியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு ஜியா குமாரியின் குடும்பம், சென்னை வந்த நிலையில், பல்லாவரத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து மாணவி சாதனை படைத்திருக்கிறார்.
தமிழில் 93 மதிப்பெண் எடுத்த ஜியா குமார, ”தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசின் திட்டங்கள் சிறப்பாக இருப்பதாக பாராட்டினார். இந்த நிலையில், தமிழில் 93 மதிப்பெண் எடுத்து அசத்திய பிஹார் மாணவிக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை கவுல் பஜாரில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்ற பீகாரை சேர்ந்த மாணவி ஜியா குமாரி 500-க்கு 467 மதிப்பெண் எடுத்து அசத்தியிருந்தார். தமிழகத்தில் கல்வி, அரசின் திட்டங்கள் சிறப்பாக இருப்பதாக மாணவி ஜியா குமாரி புகழாரம் சூட்டியிருந்த நிலையில், தமிழ்நாடு ‘எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை’ என அவர் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு – எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை!#வாழ்க_தமிழ்♥️ https://t.co/kVVP0mQCyW
— M.K.Stalin (@mkstalin) May 17, 2025