பீகாரில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 11 மணி நிலவரப்படி 18.31% வாக்குகள் பதிவாகியுள்ளது.
கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பின்பற்றி பீகார் சட்டசபை தேர்தல், 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக, இன்று, 71 தொகுதிகளுக்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தேர்தலில் மொத்தமாக 114 பெண்கள் உள்பட 1,066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பீகாரில் மொத்தமாக 2.14 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வாக்குச்சாவடியில் முறைகேடுகள், அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்கு பாதுகாப்பு பணிக்காக 30,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், பீகார் மாநில முதற்கட்ட தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 6.74% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், தற்பொழுது 11 மணி நிலவரப்படி, 18.31 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில் அதிகபட்சமாக, லக்கிசராய் தொகுதியில் 26.28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…