பீகார் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றியை வழங்க முடிவு செய்திருக்கலாம் ,ஆனால் வெற்றியின் நிலமையையோ சற்று வித்தியாசமாக அமைந்து இருக்கிறது .ஏனெனில் சில இடங்களில் வெற்றிபெற்ற வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசம் 1000 க்கு குறைவாகவே அமைந்துள்ளது .
பீகாரில் பாரதீய ஜனதா கட்சியின் (பிஜேபி) தலைமையில் செயல்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ), ஒரு நெருக்கமான போட்டிக்கு க்கு பின்னர் வெற்றி பெற்றுள்ளது .ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) -111 தலைமையிலான பெரும் கூட்டணிக்கு எதிராக 124 இடங்களுடன் பெரும்பான்மையை கடந்தது கைப்பற்றியுள்ளது .243 இருக்கைகள் கொண்ட சட்டசபையில் பெரும்பான்மை மதிப்பெண் 122 ஆகும்.
ஆனால் சில தொகுதிகளில், வெற்றி அளவு நூலளவில் இருக்கிறது . பார்பிகாவில், ஜனதா தளம் (யுனைடெட்) வேட்பாளர் சுதர்ஷ்குமார் காங்கிரஸின் ’கஜனன் ஷாஹியை வெறும் 113 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். போர் தொகுதியில் , வெற்றி வித்தியாசம் 462 வாக்குகள் மட்டுமே .
ஆர்ஜேடியின் ஃபதேபஹதூர் டெஹ்ரியில் பாஜகவின் சத்ய நாராயணனை வெறும் 464 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார் .மேலும்,ஹில்சாவில், ஜே.டி.யூ வேட்பாளர் வெறும் 12 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக என்று தேர்தல் ஆணைய இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
15 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த வாக்கு எண்ணிக்கை முடிவில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையைக் பெற்றுள்ளது . இதில் பாஜக 73 இடங்களைப் பெற்றிருந்தாலும், 76 இடங்களை வென்று ஒற்றை மிகப்பெரிய கட்சியாக ஆர்ஜேடி உருவெடுத்துள்ளது . அதன் வாக்கு சதவீதம் 23.03 ஆக உள்ளது.இது பீகார் சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்ததாகும்.
இதர கட்சிகள்:
காங்கிரஸ் போட்டியிட்ட 70 இடங்களில் 19 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. சிபிஐ (எம்எல்), சிபிஐ மற்றும் சிபிஐ (எம்) போட்டியிட்ட 29 இடங்களில் 16 இடங்களை வென்றுள்ளது.
அசாதுதீன் ஒவைசியின் AIMIM ஐந்து இடங்களிலும் , பீகாரில் அதன் கூட்டணி பங்காளியான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தை மட்டும் பிடித்ததுள்ளது .
என்.டி.ஏ-வில் இருந்து வெளியேறி கிட்டத்தட்ட 150 இடங்களுக்கு போட்டியிட்ட சிராக் பாஸ்வானின் லோக் ஜான்ஷக்தி கட்சி, ஒரு இடத்தை மட்டுமே வென்றுள்ளது.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…