எதற்காக அவசரம்… தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்த பாஜக.!

Published by
மணிகண்டன்

வழக்கமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரோ, அல்லது தேர்தல் நெருங்கும் வேளையில் தான் பிரதான கட்சியினர் வேட்பாளர்களை அறிவிப்பார்கள். ஆனால், தற்போது வழக்கத்திற்கு மாறாக பாஜக தேர்தல் அறிவிப்பதற்கு 4 மாதங்கள் முன்னரே வேட்பாளர்களை அறிவித்து பிரதான கட்சிகளுக்கு ஷாக் கொடுத்துள்ள்ளது.

மத்திய பிரதேசம் மற்றும் சதீஷ்கர் மாநிலங்களில் இந்த வருட இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு தற்போதே பாஜக தங்கள் முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். நேற்று (ஆகஸ்ட் 17) டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா , மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த பிறகு மேற்கண்ட மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மட்டும் பாஜக அறிவித்துள்ள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதில் 21 தொகுதிகளுக்கும் மத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளில் 39 இடங்களுக்கும் வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தொகுதிகளை 4ஆக கட்சி தலைமை பிரித்துள்ளது. அதாவது, வெற்றி வாய்ப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ள தொகுதிகளை 4ஆம் கட்டமாகவும், ஒருமுறை ஜெயித்துள்ள ஓரளவு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதியை 3ஆம் கட்டமாகவும், வெற்றி விகிதம் சரிபாதி உள்ள இடங்களை 2ஆம் கட்டம் என்றும், வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக இருக்கும் தொகுதிகளை 1ஆம் கட்டமாகவும் பிரித்துள்ளது,

நேற்று அறிவித்த தொகுதிகள் அனைத்தும் 4ஆம் கட்ட தொகுதிகள் என கூறப்படுகிறது . அங்கு பாஜகவின் வெற்றி வாய்ப்பு மிக குறைவு. அந்த தொகுதிகளை தற்போதே தேர்ந்தெடுத்து , அங்கு முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் வேலைகளை முடிக்கி விட பாஜக திட்டமிட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தி, பாஜக அறிவித்த 21 தொகுதிகளில் 10 இடங்கள் பட்டியல் பழங்குடியினருக்கு (ST) , ஒன்று பட்டியல் சாதியினருக்கும் (SC) மீதமுள்ள 10 பொது தொகுதிகளாகவும் உள்ளது.  கடந்த 2018 சட்டமன்றத் தேர்தலில் இடஒதுக்கீடு தொகுதிகளில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. சத்தீஸ்கரில் மொத்தம் 29 எஸ்டி மற்றும் 10 எஸ்சி இட ஒதுக்கீடு உள்ளது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

அதே போல மத்திய பிரதேசத்தில், பாஜக வேட்பாளர்களை அறிவித்த 39 தொகுதிகளில் 8 இடங்கள் எஸ்சிகளுக்கும், 13 இடங்கள் எஸ்டிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் உள்ள 47 எஸ்டி இட ஒதுக்கீடு இடங்களிலும், 35 எஸ்சி இட ஒதுக்கீடு இடங்களிலும் பெரும்பான்மையான இடஒதுக்கீடு தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றி இருந்தது. அங்கு பாஜக ஆட்சி தான் நடைபெற்று வருகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…

5 hours ago

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

6 hours ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

6 hours ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

7 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

8 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

8 hours ago