Categories: இந்தியா

பாஜக தலைவர் அனுஜ் சவுத்ரி தனது வீட்டிற்கு வெளியே சுட்டுக்கொலை..!

Published by
செந்தில்குமார்

உத்தரபிரதேசத்தின் சம்பாலைச் சேர்ந்த 34 வயதான பாஜக தலைவர் அனுஜ் சவுத்ரி, டெல்லி சாலையில் அமைந்துள்ள மொராதாபாத்தின் பார்ஷ்வநாத் ஹவுசிங் சொசைட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே தனது சகோதரருடன் நடைபயணம் மேற்கொண்டிருந்தார்.

அப்போழுது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 3 நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து, சவுத்ரியின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மொராதாபாத்தில் உள்ள பிரைட்ஸ்டார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சவுத்ரி இறந்த செய்தி பரவியதும், எஸ்எஸ்பி ஹேம்ராஜ் மீனா உட்பட அனைத்து போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், குற்றவாளிகளைத் தேடும் பணியை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை பிடிப்பதற்கு ஐந்து போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் அருகில் இருந்த சிசிடிவியில் பாதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by
செந்தில்குமார்

Recent Posts

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

17 minutes ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

43 minutes ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

1 hour ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

2 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

2 hours ago

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!

லார்ட்ஸ் : லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்…

2 hours ago