ஜம்மு -காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று பாஜக தலைவர் அவரது மனைவியும் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் நகரில் பாஜகவின் கிசான் மோர்ச்சாவின் குல்கம் மாவட்டத் தலைவர் குலாம் ரசூல் தார் மற்றும் அவரது மனைவி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
ஜம்மு -காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறுகையில், பாஜகவின் கிசான் மோர்ச்சாவின் குல்கம் மாவட்டத் தலைவர் மற்றும் அவரது மனைவி ஜவ்ஹாரா பானூ மீதான கொடூர பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது கோழைத்தனமான செயல், வன்முறையில் ஈடுபடுபவர்கள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என தெரிவித்தார்.
குலாம் ரசூல் தார் அனந்த்நாகில் ஒரு வாடகை விடுதியில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…