இன்று டெல்லி அரசின் அதிகாரத்தை பறித்த பாஜக, நாளை பிற மாநிலங்களின் அதிகாரத்தையும் பறிக்கும் -மம்தா..!

Published by
murugan

பாஜகவுக்கு எதிரான இந்தப் போரில் ஒரு மித்த கருத்துள்ள  கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், முதல்வர் டெல்லி முதல்வரை விட ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இன்று டெல்லி அரசின் அதிகாரத்தை பறித்த பாஜக அரசு நாளை பிற மாநிலங்களின் அதிகாரத்தையும் பறிக்கும். பாஜக ஆட்சி செய்யாத  மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு பிரச்சினைகளை உருவாக்குகிறது. மேற்குவங்கம் உள்ளிட்ட மாநில ஆளுநர்கள் பாஜகவின் தொண்டர்களுக்கு போல் செயல்படுகின்றன.

சிபிஐ, அமலாக்கத்துறையின் மூலம் திமுக, திரிணாமுல் தகவல்களை மத்திய பாஜக அரசு குறி வைக்கிறது. தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் தேர்தல் நெருக்கும் நிலையில் மத்திய அரசு வருமானவரி சோதனைகளை நடத்துகிறது. பிற கட்சித் தலைவர்களை மட்டும் குறிவைக்கும் சிபிஐ, அமலாக்கத்துறை பாஜக தலைவர்களை கண்டுகொள்வதில்லை.

திமுக தலைவர் மு.கஸ்டாலினுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். சோனியா காந்தி உள்ளிட்ட பாஜக அல்லாத தலைவர்களுக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். பாஜகவால் கூட்டாட்சி தத்துவம் சிதைக்கப்படுவதை தடுக்க வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

ஒற்றைக் கட்சி ஆட்சி முறையை இந்தியா முழுவதும் கொண்டு வர வேண்டுமென பாஜக நினைக்கிறது. பாஜகவுக்கு எதிரான இந்தப் போரில் ஒரு மித்த கருத்துள்ள  கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். 5 மாநிலங்களில் தேர்தல் முடிந்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம் என தெரிவித்துள்ளனர்.

Published by
murugan

Recent Posts

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

6 minutes ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

7 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

8 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

9 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

9 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

10 hours ago