காபி டே உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தா உடல் நேத்ராவதி நதியில் இருந்து மீட்ப்பு .
60 வயதான சித்தார்த் கடந்த திங்கள் மாலையில் இருந்து காணவில்லை .இவர் சிக்மங்களூருவில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்றுவிட்டு, கேரளாவிற்கு செல்ல வேண்டும் என டிரைவரிடம் கூற, மங்களூரு சாலையில் கார் சென்றது. அப்போது, நேத்ராவதி ஆற்றின் அருகே கார் செல்கையில் அந்த பகுதியில் காரை நிறுத்தி, திரும்பி வருவதாக டிரைவரிடம் கூறிவிட்டு சென்றுவிட்டார்.
இதனிடையில் காபி டே உரிமையாளர் சித்தார்த்தின் உடல் கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள நேத்ராவதி நதியில் இரண்டு நாட்களுக்கு பிறகு வி.ஜி.சித்தார்த்தாவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது .
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில் இன்று காலை 6 மணிக்கு நீண்ட தேடுதலுக்கு பின்னர் அவரது உடலை மீட்டோம் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். இது அவர்தானா என்று உறுதிபடுத்த அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என மங்களூரு காவல் ஆணையர் சந்தீப் பட்டேல் தெரிவித்துள்ளார் .
முன்னதாக மீனவர் ஒருவர் நேத்ராவதி ஆற்றின் பாலத்தில் இருந்து ஒருவர் குதித்ததாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார் .இந்த காபி டே உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தா இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணன் அவர்களின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது .
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…