எல்லைப் பிரச்சினை..எந்த அளவிற்கு தீர்க்க முடியும் என உத்தரவாதம் கொடுக்க முடியாது.. ராஜ்நாத் சிங்.!

Published by
murugan

எல்லைப் பிரச்சினையை எந்த அளவிற்கு தீர்க்க முடியும் என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

லடாக் எல்லை பகுதியில் இந்திய- சீன ராணுவத்திற்கு இடையே ஜூன் 15 ஆம் தேதி நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து, போர்ப் பதற்றம் அதிகரித்தது. இதனால், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இந்நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று லடாக் சென்றுள்ளார். அவருடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் ஆகியோர் சென்றனர்.  இதைத்தொடர்ந்து, ஸ்டக்னா பகுதியில் ராணுவ வீரர்கள் நடத்திய சாகச நிகழ்ச்சிகள் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.

பின்னர், ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே என்ன நடந்தது, எல்லையில்  பாதுகாத்த சிலர் தங்கள் உயிரை தியாகம் செய்தனர். அவர்களை இழந்ததால் வருத்தப்படுகிறேன். அவர்களுக்கு எனது அஞ்சலி செலுத்துகிறேன் என தெரிவித்தார்.

எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஆனால், அதை எந்த அளவிற்கு தீர்க்க முடியும் என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது. நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், எங்கள் நிலத்தின் ஒரு அங்குலம் கூட உலகின் எந்த சக்தியினாலும் எடுக்க முடியாது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடிந்தால், இதைவிட சிறந்தது எதுவுமில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

Published by
murugan

Recent Posts

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

48 minutes ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

57 minutes ago

”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…

2 hours ago

நிக்கிதா குறித்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்.., தலைமறைவாகி ஊர் ஊராக பதுங்கல்.!

சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…

2 hours ago

‘பரந்தூர் மக்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும்’… இல்லையெனில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் – விஜய்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

3 hours ago

முதல்வர் வேட்பாளர் விஜய்.., தவெக செயற்குழு கூட்டத்தின் முக்கியத் தீர்மானங்கள்.!

சென்னை :  2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…

4 hours ago