பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 10 முக்கிய உற்பத்தித்துறைகளுக்கு சலுகை அளிக்கஉள்ளனர். அதன்படி, 10 துறைகளுக்கு ரூ.2 லட்சம் கோடி ஊக்கத்தொகை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், ஜவுளித்துறைக்கு ரூ.10,863 கோடி கோடியும், உணவுப் பொருட்கள் துறைக்கு ரூ.10,900 கோடிகோடியும், சோலார் மின் உற்பத்தி துறைக்கு ரூ.4500 கோடியும், இரும்பு உற்பத்தித் துறைக்கு ரூ.6322 கோடியும், ஆட்டோமொபைல் துறைக்கு ரூ.57042 கோடியும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஊக்கத் தொகை திட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு முதலீடுகள் அதிகரிக்கும் எனவும் சுயசார்பு இந்தியாவை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறு முதலீட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என கூறியுள்ளார். மருத்துவம், மின்னணு உள்ளிட்ட துறைகளில் உற்பத்தியை அதிகரிக்க ஊக்கத்தொகை தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் உற்பத்தி திறன்களை மேம்படுத்துவதற்கும் ,ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கும் பத்து முக்கிய துறைகளுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது; இந்த திட்டம் இந்திய உற்பத்தியாளர்களை உலகளவில் போட்டிக்கு உட்படுத்தும், முதலீட்டை ஈர்க்கும் மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…