BREAKING: அதிரடி அறிவிப்பு.! மே 12 முதல் பயணிகள் ரயில் இயக்கப்படும் – ரயில்வே அமைச்சகம்.!

மே 12 முதல் பயணிகள் ரயில் இயங்கும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 17 தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், விமான , ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மே 12 முதல் பயணிகள் சிறப்பு ரயில் இயங்கும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக வரும் 12 ஆம் தேதி முதல் டெல்லியிலிருந்து 15 முக்கிய நகரங்களுக்கு பயணிகள் ரயில்கள் இயக்கப்படும். ரயிலில் பயணிகள் ஏறுவதற்கு முன் முகமூடி அணிந்தும், சோதனை உட்படுத்தப்படுவது கட்டாயமாக இருக்கும். மேலும் அறிகுறியற்ற பயணிகள் மட்டுமே ரயிலில் ஏற அனுமதிக்கப்படுவார்கள்.
ரயில் அட்டவணை உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் சரியான நேரத்தில் தனித்தனியாக வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த, சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை மாலை 4 மணிக்கு தொடங்கயுள்ளது. முன்பதிவை ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் மட்டுமே செய்யமுடியும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025