பிரதமர் நரேந்திர மோடி-முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பானது பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் நடைபெற்று வருகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக, 2 நாள் அரசுமுறை பயணமாக, சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லி விமானநிலையம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு, சிறப்பு பிரதிநிதி விஜயன் மற்றும் திமுக எம்பிக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
அதனை தொடர்ந்து, டெல்லியில் தயாராகும் திமுக அலுவலகத்தை ஆய்வு செய்த பின், சாணக்கியாபுரத்தில் இருக்கக் கூடிய தமிழ்நாடு பொதிகை இல்லத்திற்கு வந்தடைந்தார். தமிழக தலைமையை செயலாளர், சிறப்பு பிரதிநிதி விஜயன், திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து, காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட முதல்வர், திமுகவை சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் சிறிது நேரம் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி-முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பானது பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பின் போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவராக இருக்கக்கூடிய டி.ஆர்.பாலு மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் உடனிருக்கின்றனர். இந்த சந்திப்பானது 30 நிமிடங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…
சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…
சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…
சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…
கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…