எந்தெந்த திட்டத்திற்கு அமைச்சரவையில் ஒப்புதல்..,விவரங்கள் உள்ளே.!

Published by
பாலா கலியமூர்த்தி

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அவை பின்வருபவை..

  1. உணவு தானியங்களான (அரிசி, கோதுமை, பார்லி, மக்காச்சோளம் மற்றும் சோளம்), கரும்பு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவற்றிலிருந்து, எத்தனால் உற்பத்திக்கான வடி திறனை மேம்படுத்துவதற்காக மாற்றியமைக்கப்பட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  2. இந்தியாவில் 684 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி திறன் உள்ளது. 2019-20 சர்க்கரை ஆண்டில் எங்கள் எத்தனால் கொள்முதல் 38 கோடி லிட்டரிலிருந்து 173 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது.
  3. சென்னை – பெங்களூரு (சிபிஐசி) திட்டத்தின் கீழ் கிருஷ்ணாபட்டணம் மற்றும் துமகுருவில் தொழில் பாதை முனையம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
  4. நொய்டாவில் பன்முக மாதிரி தளவாட மையம் மற்றும் பன்முக மாதிரி போக்குவரத்து மையம் அமைக்க ஒப்புதல்.
  5. எஸ்டோனியா, பராகுவே மற்றும் டொமினிக் குடியரசு நாடுகளில் இந்திய தூதரகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
  6. பாரதீப் துறைமுகத்தில், ரூ.3,004.63 கோடி மதிப்பீட்டில் மிகப் பெரிய கப்பல்களை கையாளும் விதத்தில், மேற்கு கப்பல்துறை உள்பட உள் கட்டமைப்பு வசதிகளை பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் ஆழப்படுத்தவும், மேம்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
  7. விண்வெளியின் அமைதியான பயன்பாடுகளில் ஒத்துழைப்பு குறித்து இந்தியாவிற்கும் பூட்டானுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
  8. ஆகாஷ் ஏவுகணை அமைப்பை ஏற்றுமதி செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

7 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

9 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

13 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

14 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

16 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

16 hours ago