அரவிந்த் கெஜ்ரிவால் 3-முறையாக டெல்லி முதல்வராக நாளை பதவி ஏற்க உள்ளார்.
70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில் ,மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அதிகாரபூர்வமாக வெற்றி பெற்றது.பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது.எனவே ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைப்பது உறுதியானது.எனவே ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை மூன்றாவது முறையாக டெல்லி முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.இதற்காக ராம்லீலா மைதானத்தில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.நாளை கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்கிறார்.இவருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.
இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள டெல்லி மக்களுக்கும், கெஜ்ரிவால் அழைப்பு விடுத்து உள்ளார்.குறிப்பாக பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க குட்டி கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ‘மினி மஃப்ளர் மேன்’ என்று அழைக்கப்படும் குழந்தை டெல்லி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அன்று மிகவும் பிரபலமாக இருந்தார் .இந்த குழந்தையின் புகைப்படம் சமூக வலைதங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…