Categories: இந்தியா

Cauvery Issue : மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் சந்திப்பு.!

Published by
செந்தில்குமார்

கடந்த சில மாதங்களாகவே கர்நாடகா அரசு  உச்ச நீதிமன்ற உத்தரவுபடி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய உரிய அளவு தண்ணீரை தராமல் இருந்து வருகிறது. இதனால் தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசு, காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவற்றில் முறையிட்டு நமக்கான கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது.

இதனையடுத்து, கடந்த 12ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று வாரியமானது அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பெங்களூருவில் நடைபெற்ற கர்நாடக அனைத்து கூட்டத்தில், காவிரி ஒழுங்காற்று மையத்தின் உத்தரவுபடி, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் முறையிட உள்ளதாகவும் கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவிடக் கோரி தமிழகத்தை சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.பிக்கள் அடங்கிய குழு  தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தவுள்ளனர்.

அதன்படி அமைச்சர் துரைமுருகன் தலைமையில், அதிமுக சார்பில் தம்பிதுரை, மதிமுக சார்பில் வைகோ, விசிக சார்பில் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கேவாசன், காங்கிரஸ் தலைமையில் ஜோதி மணி, கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள், முஸ்லீம் லீக் பிரதிநிதிகள், கொங்கு நாடு கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை டெல்லியில் நேரில் சந்தித்து தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிட  கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி வலியுறுத்தவுள்ளனர்.

இந்த நிலையில், காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உடன் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். அதன்படி, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உடன் காவிரி ஆணைய தலைவர் ஹல்தர், ஒழுங்காற்று குழு தலைவர் வினீத் குப்தா, செயலர் டி.டி.ஷர்மா ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆலோசனையில், காவிரி ஆணைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், அணைகளின் நீர் இருப்பு, நீர் வரத்து, உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கையை வழங்கி அதற்கான விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும், காவிரி நீர் விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை, தமிழ்நாடு அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு இன்று சந்திக்க இருந்தது. ஆனால், தற்பொழுது இந்த சந்திப்பு நாளை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published by
செந்தில்குமார்

Recent Posts

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

39 seconds ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

2 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

3 hours ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

5 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

6 hours ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

6 hours ago