Cauvery issue [File Image]
தமிழகத்திற்கு 5,000 கன அடி தண்ணீரை திறந்துவிட உத்தரவிட்டதை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவிற்கு எதிராக கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் அனைத்து கட்சி எம்பிக்களுடன் முதலமைச்சர் சித்தராமையா ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில் தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பித்ததற்கு உடனே தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். போதிய நீர் இல்லாததால் உத்தரவின்படி தற்போது நீர் திறக்க இயலாது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 5,000 கன அடி நீர் திறக்க பலமுறை உத்தரவிட்டும் அதனை பின்பற்ற முடியாது என கர்நாடக அரசு மறுத்திவிட்டது .
கர்நாடக அரசு கடந்த சில மாதங்களாகவே உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய தண்ணீரை தராமல் இருந்து வருகிறது. இதனால் தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசு, காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவற்றில் முறையிட்டு தண்ணீர் தர கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது.
இதனைத்தொடர்ந்து, காவேரி மேலாண்மை வாரியம் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. ஆனாலும், தங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல், காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடுவோம் எனவும் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.
இந்த சமயத்தில், காவிரி நீர் விவகாரம் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவிற்கு எதிராக கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, நாளைக்கு உச்சநீதிமன்றத்தில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. உச்சநீதிமன்றம் தான் எங்களது ஒரே நம்பிக்கை என தமிழக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…