விராட் கோலிக்கு பாரத ரத்னா வழங்கி கௌரவிக்க வேண்டும் – ரெய்னா.!
விராட் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வலியுறுத்துகிறார்.

டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து ஒரு பெரிய விருப்பத்தை தெரிவித்துள்ளார். அதாவது, விராட் கோலியின் சாதனைகளுக்காக அவருக்கு பாரத் ரத்னா வழங்க வேண்டும் என சுரேஷ் ரெய்னா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து நேற்றைய தினம் ஜியோ ஹாட்ஸ்டாரில் ரெய்னா கருத்து தெரிவிக்கையில், “கோலியைப் போன்ற அந்தஸ்துள்ள ஒரு வீரர் இந்திய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்புக்காக மிக உயர்ந்த அங்கீகாரத்திற்கு தகுதியானவர்” என்று கூறினார். மேலும், இந்தி வர்ணனையாளர் குழுவிடம் பேசிய ரெய்னா, “விராட் கோலி இந்திய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்புக்காக பாரத ரத்னா விருதை வழங்கி கௌரவிக்க வேண்டும்” என்றார்.
இந்திய கிரிக்கெட்டிற்கு கோலி ஆற்றிய பங்களிப்பு எண்ணிலடங்காதது எனவும், அதனால், அவருக்கு உயரிய விருதை அளித்து கவுரவப்படுத்த மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் ரெய்னா தெரிவித்துள்ளார். முதன்முதலாக விளையாட்டில் பாரத ரத்னா விருது வாங்கியது சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி சமீபத்தில் தனது டெஸ்ட் வாழ்க்கைக்கு விடைபெற்றார், டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவதற்கு 770 ரன்கள் மட்டுமே குறைவாக இருந்ததால், கோலியின் ஓய்வு குறித்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.