சிபிஎஸ்இ தேர்வுகள் மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே நடத்தப்படும்.
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. இதனால், பொதுத்தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய மனித மேம்பாட்டுவளத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிபிஎஸ்இ தேர்வுகள் மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே நடத்தப்படும் என்றும், வேறு தேர்வு மையங்களில் நடத்தப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தேர்வு முடிவுகள் ஜூலை மாத இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…