Categories: இந்தியா

Chandrababu Naidu: சந்திரபாபு நாயுடுவை 2 நாள் விசாரிக்க அனுமதி.. நீதிமன்றம் உத்தரவு!

Published by
பாலா கலியமூர்த்தி

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சி காலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்த விவகாரத்தில் பல கோடி ரூபாய் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் செப்.11ம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார்.  100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்ததை தொடர்ந்து  சந்திரபாபு நாயுடு மீது ஆந்திர மாநில காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். முன்னாள் முதல்வரும் தற்போது எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கும் சந்திரபாபு நாயுடு கைது ஆந்திர மாநிலத்தையே அதிர வைத்தது. இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹைதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.

இதனிடையே, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. வரும் 23ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில், சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை 2 நாட்கள் சிஐடி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சந்திரபாபு நாயுடுவை 2 நாட்கள் சிஐடி காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வரதட்சணை கொடுமை வழக்கு – காவலர் பூபாலன் பணியிடை நீக்கம்.!

மதுரை : மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் பூபாலன், தனது மனைவிக்கு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும்,…

2 minutes ago

வாக்களிக்கும் வயது 16ஆக குறைப்பு: இங்கிலாந்து தேர்தல் முறையில் மாற்றம்.!

லண்டன் : நாட்டின் ஜனநாயக அமைப்பை பெரிய அளவில் மாற்றியமைக்கும் வகையில், அனைத்து இங்கிலாந்து தேர்தல்களிலும் 16 மற்றும் 17…

10 minutes ago

வயலில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து பேசிய இபிஎஸ்.!

மயிலாடுதுறை : அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதன்படி,…

1 hour ago

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்.!

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன், உயர் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து…

2 hours ago

”காவலர்கள் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்” – மு.க.ஸ்டாலின் அறிவுரை.!

சென்னை : தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சி முடித்த காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, வண்டலூர்…

2 hours ago

பாஜகவுடன் இருப்பவர்களுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை – தவெக.!

சென்னை : அதிமுக கூட்டணியில் விரைவில் பிரமாண்ட கட்சி இணைய இருப்பதாக இபிஎஸ் தெரிவித்தது பேசு பொருளாகி உள்ளது. அக்கட்சி…

3 hours ago