ஐந்தாவது சுற்றுப்பாதைக்கு சந்திராயன்-3 விண்கலம் வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது- இஸ்ரோ.!

சந்திராயன்-3 விண்கலம் 5-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு.
சந்திராயன்-3 விண்கலம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி நிலவை நோக்கி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றிவரும் இந்த சந்திராயன்-3 விண்கலத்தை 4 முறை சுற்றுப்பாதைகளுக்கு உயர்த்தப்பட்ட நிலையில் இன்று 5-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்த திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்படி சந்திராயன்-3 விண்கலத்தின் நிலவை நோக்கிய பயணத்தில் இன்று 5-வது சுற்றுவட்டப்பாதைக்கு வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.
Chandrayaan-3 Mission:
The orbit-raising maneuver (Earth-bound perigee firing) is performed successfully from ISTRAC/ISRO, Bengaluru.
The spacecraft is expected to attain an orbit of 127609 km x 236 km. The achieved orbit will be confirmed after the observations.
The next… pic.twitter.com/LYb4XBMaU3
— ISRO (@isro) July 25, 2023
விண்கலம் நிலவை நோக்கி உயர்த்தப்பட்டதில் 236 கிமீ சுற்றுப்பாதையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என ட்விட்டரில் இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் சந்திராயனின் அடுத்த உயர்த்துதல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 1 மணிக்குள் திட்டமிடப்பட்டுள்ளது.