சீனா 38,000 சதுர கி.மீ. பகுதியையும் ,பாகிஸ்தான் 5,180 சதுர கி.மீ. பகுதியையும் ஆக்கிரமித்துள்ளது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஏற்பாடுகளுடன் இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் பேசினார்.அவர் பேசுகையில், இந்தியா எல்லைப் பகுதியில் பல இடங்களை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது.லடாக் பகுதியில் 38,000 சதுர கி.மீ. நிலத்தை சீனா கையகப்படுத்தி உள்ளது. அருணாசலப்பிரதேசத்தில் உள்ள எல்லையில் 90,000 சதுர கி.மீ. பரப்புக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது.
எல்லை பகுதியில் பாகிஸ்தான் 5,180 சதுர கி.மீ. பரப்பை ஆக்கிரமித்துள்ளது.இந்தியாவும் சீனாவும் எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்றே விரும்புகிறோம்.எல்லை வரையறை செய்வது குறித்து இரு நாடுகளும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. எல்லையில் சீனப்படைகள் ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டபோதிலும் இந்திய வீரர்கள் கட்டுப்பாட்டுடன் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…