External Minister Jaishankar [File Image]
Jaishankar : உங்கள் வீட்டின் பெயரை மாற்றினால் அது என் வீடாக மாறிவிடாது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சீனா தங்கள் நாட்டுடன் இணைத்து பெயர் வெளியிடுவது, அங்கிருந்து வருபவர்களுக்கு இந்திய விசா என குறிப்பிடாமல் சீனாவின் குறிப்பிட்ட பெயரை வைத்து விசா பதிவிடுவது என பல்வேறு சர்ச்சை வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறது.
ஏற்கனவே, கடந்த 2017, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் அருணாச்சல பிரதேச சில பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்து குறிப்பிட்டு வந்த சீன அரசு, தற்போது மீண்டும் அதனை தொடர்ந்துள்ளளது. கிழக்கு அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 11 மாவட்டங்கள், 12 மலைகள், 4 ஆறுகள், ஏரி உள்ளிட்ட 30 இடங்களுக்கு சீனா “ஸாங்னங்” என புதிய பெயர் சூட்டியுள்ளது.
இந்திய பகுதிகளை சீனா தங்கள் நாட்டுடன் இணைத்து அவ்வப்போது இவ்வாறான செய்திகள் பரப்பி வருவதற்கு பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், ‘ இன்று நான் உங்கள் வீட்டின் பெயரை மாற்றினால், அது என்னுடையதாகவிடாது. அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் மாநிலமாக இப்போதும் இருக்கிறது. அது எப்போதும் இருக்கும். பெயர்களை மாற்றுவது பெரிய விஷயம் இல்லை. நமது ராணுவம் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது என ஜெய்சங்கர் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…