SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!
ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையால் ரத்தானதால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இந்த வருட ஐபிஎல்லில் முடிவு இல்லாத இரண்டாவது போட்டி இதுவாகும்.
இதன் மூலம், சென்னை மற்றும் ராஜஸ்தானை தொடர்ந்து ஹைதராபாத் அணியும் அடுத்த சுற்றுக்கு செல்லாது. ஆம், குறுக்கே வந்த மழை காரணமாக, எளிய இலக்கை கூட எட்டி பிடிப்பதில் விளையாட கூட முடியாமல், 3-வது அணியாக பிளேஆஃப் வாய்ப்பில் இருந்து வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
முதலில் பேட்டிங் டெல்லி கேபிடல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 134 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. டாஸ் இழந்து பேட்டிங் செய்ய வந்த டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி சார்பாக, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அசுதோஷ் சர்மா 41-41 ரன்கள் என்ற கணக்கில் முதல் இன்னிங்ஸை முடித்து கொண்டனர்.
ஹைதராபாத் அணி தரப்பில், பவர்பிளேயில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் பேட் கம்மின்ஸ் இன்றைய போட்டியில் கலக்கினார். மேலும், ஜெய்தேவ் உனத்கட், ஹர்ஷல் படேல், இஷான் மலிங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இறுதியில், டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து, ஹைதராபாத் அணி வீரர்கள் களமிறங்குவதற்கு முன்பே மழை குறுக்கிட்டது. நீண்ட நேரம் பெய்த மழையால் மைதானத்தின் ஈரப்பதம் அதிகமாக இருந்ததன் காரணமாக போட்டி ‘டை’ ஆனது. இந்நிலையில், 13 புள்ளிகளுடன் டெல்லி அணி 5-வது இடத்திலும் 7 புள்ளிகளுடன் ஹைதராபாத் அணி 8-வது இடத்திலும் உள்ளன.