SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

கருண் நாயர், ஃபாஃப் டூபிளஸிஸ், அபிஷேக் போரல் என அடுத்தடுத்த ஓவர்களில் 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார் கேப்டன் பேட் கம்மின்ஸ்.

DC vs SRH - Pat Cummins

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய வந்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு தொடக்கம் மோசமாக இருந்தது. பவர் பிளேயிலேயே அந்த அணி மூன்று விக்கெட்டுகளை இழந்தது. அட ஆமாங்க.., முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து நடையை கட்டினர்.

கருண் நாயர், டு பிளெஸ்ஸிஸ், அபிஷேக் போரல் என முக்கியமான வீரர்களை ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அவுட்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். ஹர்சல் படேலும் தன் பங்கிற்கு ஒரு விக்கெட் வீழ்த்தினார்.   மேலும், ஃபாஃப் டு பிளெசிஸ் மூன்று ரன்கள் எடுத்தார்.

அபிஷேக் போரெல் 10 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த மூன்று விக்கெட்டுகளையும் பாட் கம்மின்ஸ் வீழ்த்தினார். கேப்டன் அக்சர் படேல் 7 பந்துகளில் 6 ரன்கள் எடுத்தார். கே.எல். ராகுல் 10 ரன்கள் எடுத்தும், விப்ராஜ் 17 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தும் அடுத்தடுத்த ஆட்டமிழந்தனர்.

டெல்லி அணி சார்பாக, அதிக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அசுதோஷ் சர்மா 41-41 ரன்கள் என்ற கணக்கில் இன்னிங்ஸ் விளையாடினர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில், கருண் நாயர், ஃபாஃப் டூபிளஸிஸ், அபிஷேக் போரல் என அடுத்தடுத்த ஓவர்களில் 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார் கேப்டன் பேட் கம்மின்ஸ்.

ஜெய்தேவ் உனத்கட், ஹர்ஷல் படேல், இஷான் மலிங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இறுதியில், டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. இப்பொது, 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்கை நோக்கி, ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய களமிறங்க போகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்