அமெரிக்காவில் முதலீடு செய்ய வாருங்கள் – இந்திய தொழில்துறையினருக்கு ட்ரம்ப் அழைப்பு

அமெரிக்காவில் முதலீடு செய்ய இந்திய தொழில்துறையினர் முன்வர வேண்டும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தொழில்துறையினர் மத்தியில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசினார்.அவர் பேசுகையில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்கா தயாராக உள்ளது.
அமெரிக்காவில் முதலீடு செய்ய இந்திய தொழில்துறையினர் முன்வர வேண்டும்.அமெரிக்காவில் தொழில் தொடங்குவதற்கான அனுமதி காலம் குறைக்கப்படும். நான் மீண்டும் அமெரிக்க அதிபரனால் பங்குச்சந்தை வளர்ச்சி அடையும்.இந்தியாவுடன் வர்த்தக உடன்பாடு காண்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.அமெரிக்க அதிபராக வேறொருவர் இருந்தால் இந்தியர்களின் தொழில் வாய்ப்புகள் கடுமையாக பாதிக்கும்.நான் மீண்டும் அதிபர் ஆகாவிட்டால் இரும்பு மற்றும் அலுமினியத்துறை கடும் வீழ்ச்சியை சந்திக்கும் என்று பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025