இன்று ராணுவ தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று இந்திய ராணுவ தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ராணுவ தினத்தை முன்னிட்டு நமது துணிச்சலான, மரியாதைக்குரிய வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்.
இந்திய ராணுவம் அதன் துணிச்சலுக்கும், நேர்த்திக்கும் பெயர் பெற்றது. தேசத்தின் பாதுகாப்பிற்காக இந்திய ராணுவம் செய்யும் விலைமதிப்பற்ற பங்களிப்பிற்கு வார்த்தைகளால் நியாயம் சொல்ல முடியாது. இந்திய ராணுவ வீரர்கள் விரோதமான நிலப்பரப்புகளில் பணியாற்றுகின்றனர்.
இயற்கை பேரழிவு உள்ளிட்ட மனிதாபிமான நெருக்கடிகள் உள்ள போதும் தங்கள் தேச குடி மக்களுக்கு உதவுவதில் கவனமாக உள்ளனர். வெளிநாடுகளில் அமைதிகாக்கும் பணிகளிலும் ராணுவத்தின் சிறப்பான பங்களிப்பிற்காக இந்தியா பெருமை கொள்கிறது என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…